என் மலர்

  சினிமா

  இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
  X

  இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினி, தற்போது ஒரு இயக்குனருக்கு போன் செய்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். #Rajini #Rajinikanth
  நயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் `கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தில் யோகி பாபு, ஜாக்குலின் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சினிமா நட்சத்திரங்களும் படம் பார்த்துப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  அந்த வரிசையில் ரஜினிகாந்த், படம் பார்த்து விட்டு இயக்குநர் நெல்சனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் நெல்சன், “எனக்கு ஒரு சர்ப்ரைஸ் கால் வந்தது. அது ரஜினிகாந்த் தான். அவர் என்னிடம் சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன் என்றார். நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினியின் வாழ்த்து கிடைத்ததால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.
  Next Story
  ×