என் மலர்
சினிமா

செப்டம்பரில் 7-ல் ராமின் பேரன்பு ரிலீஸ்
ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty
‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 7-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். சரத்குமார், அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ ராஜலெக்ஷ்மி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #Peranbu #Mammootty #Anjali
Next Story






