என் மலர்
சினிமா

விஜய் தமிழ்நாட்டை ஆள்வார் - ராதாரவி
‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் ராதா ரவி, விஜய் புரட்சித்தலைவரை போல நிச்சயமாக வருவார் என்றும், விரைவில் அவர் தமிழ்நாட்டை ஆள்வார் என்றும் கூறியிருக்கிறார். #Vijay #RadhaRavi
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மூத்த நடிகர் ராதாரவி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் அவர் நடிகர் விஜய் பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘‘விஜய் இன்னும் ஐந்து அல்லது ஆறு வருடங்களில் அரசியலுக்கு வரவேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே தைரியமாக பல விஷயங்களை செய்தவர் விஜய்.

அதனால் தான் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். நீங்கள் புரட்சித்தலைவரை போல நிச்சயமாக வருவீர்கள். அதற்காக அவரிடம் இருக்கும் சில குணங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். திரையுலகை ஆள்வது போல தமிழ்நாட்டையும் ஆள்வார் விஜய்” என ராதாரவி கூறியுள்ளார். #Vijay #Sarkar #RadhaRavi
Next Story






