என் மலர்

  சினிமா

  எம்.ஜி.ஆர். படத் தலைப்பில் விஜய்சேதுபதி
  X

  எம்.ஜி.ஆர். படத் தலைப்பில் விஜய்சேதுபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருண் குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பு பரிசீலனையில் உள்ளது. #VijaySethupathi #Anjali
  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜுங்கா' படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தற்போது `சீதக்காதி', `சயீரா நரசிம்ம ரெட்டி', ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படம், மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி படத்திலும், அருண்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

  அருண்குமார் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் சேதுபதி. விஜய் சேதுபதி போலீஸ் வேடத்தில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  அந்த படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இருக்கிறது. விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்து வருகிறது. சேதுபதி 2 என்று பெயரிடப்படலாம் என்று செய்தி வந்த நிலையில், இப்போது `திருடாதே' அல்லது `மலைக்கள்ளன்' என 2 தலைப்புகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். இரண்டுமே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் தலைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

  இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #VijaySethupathi #Anjali

  Next Story
  ×