search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    சூர்யாவின் அடுத்த படத்தில் முக்கிய மாற்றம்
    X

    சூர்யாவின் அடுத்த படத்தில் முக்கிய மாற்றம்

    `என்ஜிகே' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #Suriya37 #KVAnand
    செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தை தொடர்ந்து, சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் லண்டனில் நடந்தது. சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருந்த கேவ்மிக் யு அரி வேறு படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக அபிநந்தன் ராமானுஜம் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 
    லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand 

    Next Story
    ×