என் மலர்
சினிமா

யாஷிகா- மகத் காதலா?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #BiggBoss
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சி நாளாக நாளாக சூடு பிடிக்கிறது. நிஜ கணவன் மனைவியான பாலாஜி - நித்யா இடையேயான சண்டை சுவாரஸ்யமாக மாறி வருகிறது. சண்டையோ சமாதானமோ இருவரும் ஓவராக செல்கிறார்கள்.
அதுபோல், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் படுத்திருந்த கட்டிலில் அவர்களுக்கு நடுவில் மகத் படுத்துக்கொண்டார். இதுவும் பலர் மத்தியில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மகத்துக்கும் யாஷிகாவுக்குமான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இருவரும் காதலித்து விடுவார்களோ? காதலிக்கிறார்களா? என்றும் பார்வையாளர்கள் பலரும் பேசிவருகிறார்கள். பொன்னம்பலம் வீட்டில் நடப்பவற்றை பிக்பாசிடம் போட்டுக்கொடுக்கிறார் என்று அவர்மீது கடுப்பில் இருக்கிறார்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள். அவரை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டமிடுகிறார்கள்.
Next Story






