என் மலர்

  சினிமா

  சூர்யா படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்
  X

  சூர்யா படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. #Suriya37 #Sayyeshaa
  சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே.' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.

  இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், சூர்யா ஜோடி மற்றும் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை இயக்குநர் கே.வி.ஆனந்த் இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கலும், முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.   லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கின்றனர். #Suriya37 #Sayyeshaa

  Next Story
  ×