என் மலர்
சினிமா

விஜய் படத்திற்கு இத்தனை டைட்டிலா?
விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் தலைப்பு இன்று வெளியாக இருக்கும் நிலையில், பல டைட்டில் சமூக வலைத்தளத்தில் போலியான டைட்டில் வெளியாகி இருக்கிறது. #Vijay #Thalapathy62
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், நேற்று இரவு விஜய் படத்திற்கு ‘வேறலெவல்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பரவியது. பின்னர், சிறிது நேரத்தில் ‘அல்லு’ என்றும், ‘ஷார்ப்’ என்றும் பெயர்கள் தலைப்பு வைத்திருப்பதாக போஸ்டர்கள் வெளியானது. இறுதியாக இது டைட்டில் இல்லடா என்றும் ஒரு போஸ்டர் வெளியானது.

இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் இவை அனைத்தும் போலி என்றும் அதிகாரப்பூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் சமாதானம் படுத்திக் கொண்டனர்.

விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #Vijay62 #Thalapathy62
Next Story