என் மலர்
சினிமா

திரிஷாவுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்தது ஐகோர்ட்டு
நடிகை திரிஷா போலி கணக்கு காட்டியதாக வருமானத்துறை விதித்த அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. #Trisha #Trishkrishnan
நடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார். ஆனால் திரிஷா காண்பித்த வருமான கணக்கை வருமான வரித் துறை ஏற்க மறுத்துவிட்டது. அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது. தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை உத்தர விட்டது.
இதனை எதிர்த்து நடிகை திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. திரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடத்தக்கது.
Next Story






