என் மலர்

  சினிமா

  விஸ்வரூபம்-2 டிரைலரை வெளியிடும் மூன்று பிரபலங்கள்
  X

  விஸ்வரூபம்-2 டிரைலரை வெளியிடும் மூன்று பிரபலங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை பிரபலங்கள் மூன்று பேர் வெளியிட இருக்கின்றனர். #Vishwaroopam2 #KamalHaasan
  கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. 

  சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை் கிடைத்தது.  அதுமுதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் படத்தின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. 

  அதன்படி விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் வருகிற 11-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தமிழில் இந்த டிரைலரை சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர்.   இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இயக்கி இருக்கிறார்.

  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

  Next Story
  ×