search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எதிர்பார்த்ததை விட குறைவாக தான் எதிர்ப்புகள் வந்துள்ளது - ரஜினிகாந்த்
    X

    எதிர்பார்த்ததை விட குறைவாக தான் எதிர்ப்புகள் வந்துள்ளது - ரஜினிகாந்த்

    காலா புரோமஷன் நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்ற ரஜினி, தான் எதிர்பார்த்ததை விட குறைவாக தான் எதிர்ப்புகள் வந்திருப்பதாக கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக ரஜினி தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ரஜினி விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினி அளித்த பேட்டி வருமாறு:-

    கே:- தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளரே?

    ப:- சிலர் நான் சொன்னதை திரித்து சொல்லி வருகிறார்கள். இப்போது தொழில்நுட்பம் பெறுகிவிட்டது. யூடியூப் வீடியோவில் என்ன வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். நான் என்ன சொல்லி இருக்கேன். என்ன பேசி இருக்கேன் என்பது அதில் உள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. 

    கே:- காலா படத்தின் புரமோ‌ஷனுக்காகவே ரஜினி தூத்துக்குடி சென்றதாக விமர்சிக்கப்படுகிறதே? சாரிங்க... அது பற்றி நான் சொல்ல விரும்பல. ஆண்டவன் அருளால் என்னோட ரசிகர்கள், மக்களோட ஆதரவு உள்ளது. படம் ஒடுவதற்காக இந்த மாதிரி ஸ்டண்ட் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. சினிமாவுக்கு வந்து 43 வரு‌ஷம் ஆகுது. இந்த வயசுல நான் அதுமாதிரி செய்யணும்னு அவசியம் இல்லை.

    கே:- அரசியலில் குதித்துள்ள உங்களையும், உங்கள் தொழிலையும் தொடர்புபடுத்தி பேசுறத எப்படி பார்க்கிறீங்க?

    ப:- அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. என்ன பண்றது. அரசியல் வேற, சினிமா தொழில் வேற.



    கே:- அரசியல் பிரவேசத்துக்கு அப்புறம் காலா படம் வருது. உங்க மன்றத்தின் சார்பா என்ன வேண்டுகோள் விடுக்கிறீர்கள்?

    ப:- எதிர்ப்புகள் இன்னும் கம்மியா இருக்கேன்னு நான் பார்த்துட்டு இருக்கேன். இதைவிட ஜாஸ்தியா இருக்கும்னு நினைச்சேன். படம் நல்லா இருந்தா 100 சதவீதம் நன்றாக ஓடும். நன்றாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

    கே:- காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதே?

    ப:- கர்நாடகாவில் ஒரு பிரச்சினையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். எதிர்ப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இது கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கும் தெரியும். அங்கு நமது தமிழக மக்கள் மட்டுமல்ல. பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே அவர்களை ஏமாற்றக் கூடாது. எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். தேவையான பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கு. நான் மதிக்கும் பெரியவர் தேவேகவுடாவும் இருக்கிறார். அவர் நிச்சயம் படத்தை தடை செய்ய விடமாட்டார்.

    கே:- பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாத நிலையில் அவர் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறாரே?

    ப:- சார்... அது பற்றி நான் கருத்து கூறவிரும்பவில்லை.

    கே:- நீட் தேர்வு வேண்டாம் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப:- இதுபற்றி பெரியவர்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரஜினி கூறினார். #Kaala #Rajinikanth

    Next Story
    ×