என் மலர்
சினிமா

நாடோடிகளாகும் அஞ்சலி, அதுல்யா ரவி
சமுத்திரக்கனி - சசிகுமார் இணையும் 'நாடோடிகள் 2' படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
2009-ம் ஆண்டு சமுத்திரக்கனி - சசிகுமார் இணைப்பில் வெளியான படம் 'நாடோடிகள்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகம் உருவாக இருக்கிறது. இதில் மீண்டும் சமுத்திரக்கனியும் சசிகுமாரும் இணைந்து பணிபுரியவுள்ளார்கள்.
நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் என்டர்டெயின்மென்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் பாகத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அனன்யாவும் தங்கையாக அபிநயா நடித்திருந்தார்கள். தற்போது இரண்டாம் பாகத்தில் அஞ்சலியும், அதுல்யா ரவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதில் அஞ்சலி ஜோடியாகவும், அதுல்யா ரவி தங்கையாகவும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story