என் மலர்
சினிமா

தள்ளிப்போன `மாயவன்' மிரட்டல்: இடைவெளியை நிரப்பிய `குரங்கு பொம்மை'
சி.வி.குமார் இயக்கத்தில் நாளை ரிலீசாக இருந்த `மாயவன்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து `குரங்கு பொம்மை' அந்த இடத்தை நிரப்பி இருக்கிறது.
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் படம் `மாயவன்'. ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சில காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே படத்தின் ரிலீஸ்-ம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தை நிரப்பும் விதமாக நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடிப்பில் ரிலீசுக்காக காத்திருந்த `குரங்கு பொம்மை' செப்டம்பர் 1-ல் ரிலீசாக இருக்கிறது. அதேநாளில் விஜய் சேதுபதியின் `புரியாத புதிர்', `ஒரு கனவு போல' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கிறது.

Next Story