என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
விரைவில் இந்தியா வரும் டாடா டியாகோ EV
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ EV இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய டாடா எலெக்ட்ரிக் கார் கனெக்டெட் தொழில்நுட்பம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டாடா டியாகோ EV மாடல் செப்டம்பர் 28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறைந்த விலையில் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஹேச்பேக் மாடலில் முதல் முறை வழங்கப்படும் அம்சங்கள் டியாகோவில் வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இதில் Z-கனெக்ட் கனெக்டெட் கார் தொழில்நுட்பம், குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சார்ந்த ரிமோட் அம்சங்களை இயக்க முடியும்.
புதிய டியாகோ EV மாடலில் ரிஜெனரேஷன் மோட்கள் வழங்கப்பட உள்ளது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் டாடா டிகோர் EV மாடலில் CCS2 சார்ஜிங் மற்றும் 25 கிலோவாட் DC பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதே சார்ஜிங் வசதி புதிய டியாகோ EV மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பவர்டிரெயினை பொருத்தவரை டியாகோ EV மாடலில் டிகோர் EV காரில் வழங்கப்பட்ட 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 26 கிலோவாட் ஹவர் லிக்விட் கூல்டு பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.