search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    450சிசியில் Naked பைக் உருவாக்கும் ராயல் என்பீல்டு - எதிர்பார்க்கப்படும் விலை, விவரங்கள்
    X
    கோப்புப்படம்

    450சிசியில் Naked பைக் உருவாக்கும் ராயல் என்பீல்டு - எதிர்பார்க்கப்படும் விலை, விவரங்கள்

    • ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்ற என்ஜின், சேசிஸ் வழங்கப்படலாம்.
    • புதிய ராயல் என்பீல்டு பைக்கின் பாகங்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 450 சிசி பிரிவில் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் குயெரில்லா (Guerrilla) 450 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    புதிய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஹிமாலயன் மாடலை தழுவி நேக்கட் மோட்டார்சைக்கிள் மாடலாக உருவாக்கப்படுகிறது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    ஹிமாலயன் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வரும் குயெரில்லா 450 மோட்டார்சைக்கிள் அதன் புரொடக்ஷன் நிலையில் இருக்கும் வேரியண்ட் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த மாடலிலும் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற என்ஜின் மற்றும் சேசிஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    புதிய பைக்கின் பியூவல் டேன்க், சீட், மட்கார்டுகள் மற்றும் முன்புற சஸ்பென்ஷன் என்று எல்லாமே வித்தியாசமாகவே காட்சியளிக்கிறது. இதில் உள்ள அலாய் வீல்கள் 17 இன்ச் அளவில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது. இந்த மாடலில் ஃபுல் கலர் டி.எஃப்.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு குயெரில்லா 450 மாடலிலும் 452சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த என்ஜின் 39.47 ஹெச்.பி. பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு பைக்கின் விலை ரூ. 2.4 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×