search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மஹிந்திரா அல்டுராஸ் G4 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்
    X

    மஹிந்திரா அல்டுராஸ் G4 புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

    • மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் G4 புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 4WD வேரியண்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்டுராஸ் G4 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அல்டுராஸ் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் 2WD ஹை என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த 4WD மாடலுக்கு மாற்றாக அமைகிறது.

    தற்போதைய 4WD வேரிண்ட் உடன் ஒப்பிடும் போது மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் காரணமாக அல்டுராஸ் G4 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது. அல்டுராஸ் G4 4WD வேரியண்ட் விலை தற்போது ரூ. 31 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் 2WD வேரியண்ட் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்ட் ஹெச்ஐடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லைட்கள், கார்னரிங் வசதி, 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், டிண்ட் செய்யப்பட்ட கிளாஸ், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், 8 ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×