search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் ஹூண்டாய்
    X

    குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் உருவாக்கும் ஹூண்டாய்

    • ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 40 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது.
    • இந்தியாவில் ஆறு புது எலெக்ட்ரிக் கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    தென் கொரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் கம்பெனி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருகிறது. பிரீமியம் கார் மாடல்கள் மட்டுமின்றி சிறிய ரக எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் திட்டம் இருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

    சார்ஜிங் உள்கட்டமைப்பு, விற்பனை, உற்பத்தி மற்றும் அசெம்ப்லி வழிமுறைகள் என பல்வேறே பிரச்சினைகளை எதிர்கொள்ள பல்வேறு பிரிவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க் தெரிவித்துள்ளார்.


    "முடிந்தவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்தி, விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முயற்சித்து வருகிறோம். இதற்கான சூழல் தயாராக இருக்க வேண்டும். சார்ஜிங் செய்வதற்கு ஏற்ற வசதி போதுமானதாக இருக்க வேண்டும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் நடைபெறும் ஒட்டுமொத்த கார் விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. மத்திய அரசு 2030-க்குள் இந்த எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

    Next Story
    ×