என் மலர்

  இது புதுசு

  எலெக்ட்ரிக் i10 உருவாக்கும் ஹூண்டாய் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?
  X

  எலெக்ட்ரிக் i10 உருவாக்கும் ஹூண்டாய் - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹூண்டாய் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீடு பற்றிய அப்டேட்களும் வெளியாகியுள்ளன.

  ஹூண்டாய் நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் தனது கியா மற்றும் ஜெனிசிஸ் பிராண்டுகளின் கீழ் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

  இந்த நிலையில், ஐரோப்பிய சந்தையை குறி வைத்து 20 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. "இது போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை 20 ஆயிரம் யூரோக்கள் என எல்லோருக்கும் தெரியும்," என ஹூண்டாய் ஐரோப்பா விற்பனை பிரிவு தலைவர் ஆண்ட்ரியாஸ் க்ரிஸ்டோப் ஃஹாப்மேன் தெரிவித்தார்.


  முன்னதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ID.Life கானெச்ப்ட் கார்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்வதாகவும், இவற்றின் விலை 25 ஆயிரம் டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்து இருந்தது. தற்போது ஹூண்டாய் தலைவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் i10 எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றே உணர முடிகிறது. i10 கார் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் ஆகும்.

  இது ஐரோப்பா மட்டுமின்றி இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த வரிசையில், பல்வேறு புது மாடல்களை கொண்டு வர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

  Next Story
  ×