search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்
    X

    மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz #ElectricCar



    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் கார் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இ.க்யூ.சி. எஸ்.யு.வி. கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாகி வருகிறது.

    இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம். எனினும் சரியான வெளியீடு பற்றி தற்சமயம் எவ்விதல தகவலும் வழங்க இயலாது என மெர்சிடிஸ் பென்ஸ் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்குவென்க் தெரிவித்தார். 

    தற்சமயம் எங்களது இலக்கு பி.எஸ். VI ரக விதிமுறைகள் தான். இதைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டோ அல்லது உள்நாட்டில் உருவாக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 



    2025 ஆம் ஆண்டு வாக்கில் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் 25 சதவிகித பங்கு வகிக்க மெர்சிடிஸ் பென்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும். 

    சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின் இந்திய ஆலையில் உருவாக்கப்பட்டு பின் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. எஸ்.யு.வி. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 80kWh பேட்டரி பேக் மூலம் இயங்குகிறது. இந்த மோட்டார் 402 பி.ஹெச்.பி. மற்றும் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    புதிய இ.க்யூ.சி. மாடல் மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் செல்லும் என்றும் அதிகபட்சம் மணிக்கு 180 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை செல்லும். #MercedesBenz #ElectricCar
    Next Story
    ×