என் மலர்

  கார்

  ரூ. 27 லட்சம் பட்ஜெட்டில் புத்தம் புது ஹூண்டாய் டக்சன் இந்தியாவில் அறிமுகம்
  X

  ரூ. 27 லட்சம் பட்ஜெட்டில் புத்தம் புது ஹூண்டாய் டக்சன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹூண்டாய் நிறுவனத்தின் 2022 டக்சன் மாடல் இந்திய விலை விவரங்கள் ஒருவழியாக அறிவிக்கப்பட்டு விட்டது.
  • 2022 டக்சன் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங் மற்றும் புதிய இண்டீரியர் கொண்டுள்ளது.

  ஹூண்டாய் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய டக்சன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் டக்சன் மாடல் விலை ரூ. 27 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஜூலை 18 ஆம் தேதி துவங்கியது.

  2022 ஹூண்டாய் டக்சன் மாடல் மேம்பட்ட ஸ்டைலிங், புதிய இண்டீரியர் மற்றும் அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது. இந்த எஸ்யுவி மாடல் கூர்மையான தோற்றம், ஹூண்டாய் பாராமெட்ரிக் ஜூவல் டிசைன் கிரில், எல் வடிவ எல்இடி டிஆர்எல்-களை கொண்டிருக்கிறது. இதன் கேபின் ஸ்ப்லிட் ரக காக்பிட் தோற்றம் கொண்டுள்ளது. இதில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமெண்ட் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது.


  இந்த காரில் லெவல் 2 ADAS தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் பிளைண்ட் ஸ்பாட், கிராஸ் டிராபிக் கொலிஷன் வார்னிங் மற்றும் அவாய்டன்ஸ் அம்சங்கள் உள்ளன. இவற்றுடன் 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டரிங், புளூ லின்க் கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம், போஸ் ஆடியோ சிஸ்டம், ஹீடெட் மற்றும் வெண்டிலேடெட் முன்புற சீட்கள் உள்ளன.

  2022 ஹூண்டாய் டக்சன் மாடல் 2.0 லிட்டர், நான்கு சிலண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் 2 லிட்டர் என்ஜின் 154 ஹெச்பி பவர், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

  2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் 184 ஹெச்பி பவர், 416 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

  Next Story
  ×