search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆடி இ டிரான்
    X
    ஆடி இ டிரான்

    இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்த ஆடி

    ஆடி நிறுவனம் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஆடி நிறுவனத்தின் இ டிரான் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன. புதிய இ டிரான் துவக்க விலை ரூ. 99.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்கள் விலை முறையே ரூ. 1.16 கோடி மற்றும் ரூ. 1.17 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    ஆடி விற்பனை மையங்கள் மற்றும் ஆடி இந்தியா வலைதளங்களில் புதிய எலெக்ட்ரிக் மாடல்களின் முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தோற்றத்தில் இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் மாடல்கள் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. 

     ஆடி இ டிரான்

    ஆடி இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களில் 95kW பேட்டரியும், இ டிரான் 50 மாடலில் 71 kW பேட்டரியுடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. எலெக்ட்ரிக் மாடல்கள் 408 பி.ஹெச்.பி. பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும்.  

    புதிய இ டிரான் சீரிஸ் மாடல்களில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பானரோமிக் சன்ரூப், ஆரஞ்சு நிற பிரேக் கேலிப்பர்கள், 20-இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. இ டிரான் 55 மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 359 முதல் 484 கிலோமீட்டர்கள் வரை செல்லும். இ டிரான் 50 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 264 முதல் 379 கிலோமீட்டர்கள் வரை செல்லும். 

    Next Story
    ×