search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இணையத்தில் லீக் ஆன ஹண்டர் 350 விவரங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ஹண்டர் 350 விவரங்கள்

    • ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஹண்டர் 350 மாடல் ஜெ பிளாட்பார்மில் உருவாகும் 350சிசி மோட்டார்சைக்கிள் ஆகும்.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், இந்த மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய ஹண்டர் 350 மாடலில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று 349சிசி என்ஜின் தான் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹண்டர் 350 மாடலில் இந்த என்ஜின் 20.2 ஹெச்.பி. பவர் கொண்டுள்ளது. இதன் டார்க் 27 நியூட்டன் மீட்டர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


    Photo Courtesy: Bikewale

    அளவீடுகளை பொருத்தவரை இந்த மாடலின் வீல் பேஸ் 130 மில்லிமீட்டர் அளவில் இருக்கிறது. இது கிளாசிக் மற்றும் மீடியோர் மாடல்களில் வழங்கப்பட்டதை விட குறைவு ஆகும். மற்ற இரு மாடல்களிலும் முறையே 1390 மில்லிமீட்டர் மற்றும் 1400 மில்லிமீட்டர் அளவு வீல் பேஸ் உள்ளது. புதிய ஹண்டர் மாடலின் மொத்த எடை 180 கிலோ ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் இந்த மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×