என் மலர்
- இந்தியா கூட்டணி ஆபத்தான நிலையில் உள்ளது.
- அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது. அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.
இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.
பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது மற்றும் பீகாரில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகியவை இந்தியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்சனையாக இருந்தது.
பா.ஜ.க.வில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி உறுதியுடன் போட்டியிடுகிறது.
ஆனால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது என்றார்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.
விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில் மலேசியாவில் நடைபெறும் 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.
இதற்கிடையே, அரசன் படத்தில் பயங்கர பிசியாக நடித்து வரும் சிம்பு நகை கடை திறப்பு விழாவிற்காக இன்று மலேசியா சென்றுருந்தார்.
அந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட கையோடு, ஒரு தல ரசிகனாக அஜித்தை பார்க்க சென்றுவிட்டார்.
அதுவும் எப்படி தெரியுமா..? அஜித்தின் ரேஸிங் அணியின் ஜெர்சியை அணிந்து அவரை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்தார் சிம்பு. இவர்களின் சந்திப்பினால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.
- 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார்.
- குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார்.
நடப்பு ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் உலக அளவில் இந்தியாவை சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவில் அவர் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் அவர் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதராக பொறுப்பேற்றார்.
- இந்தியாவுடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
புதுடெல்லி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு இந்தியா பணியவில்லை.
தொடர்ந்து இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்தியா உடனான நட்பை தொடர்ந்து நீடிப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் என டிரம்ப் சொல்லி வருகிறார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.
அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர் இந்தியாவின் புதிய தூதரக பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற விழாவில் பேசிய அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார். அவரின் இந்த கருத்து இந்தியாவுடனான வர்த்தக முன்னேற்றத்திற்கான ஒரு படிக்கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை டிசம்பர் 10ம் தேதி முதல் டெல்லியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 'ஹாப்பி ராஜ்' படத்தின் First Look போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் கடந்துள்ளார்.
- இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ரோகித் சர்மா தான் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் குவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.
அந்த பட்டியல்:
சச்சின் டெண்டுல்கர்-34,357 ரன்கள்
விராட் கோலி-27,910 ரன்கள்
ராகுல் டிராவிட்-24,208 ரன்கள்
ரோகித் சர்மா-20000 ரன்கள்
- வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது.
- ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொள்கிறது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி வாய்ப்பை பெற்ற இந்தியா லீக் சுற்றில் சிலி ( 7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகிய அணிகளை தோற்கடித்தது.
ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா (4-0), கனடா (7-0), அயர்லாந்து (5-1) ஆகிய வற்றையும், கால் இறுதியில் பிரான்சையும் தோற்கடித்தது. இந்தியாவை போலவே ஜெர்மனியும் கால் இறுதியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் (3-1) வீழ்த்தியது. போட்டி முடிவில் 2-2 என்ற சமநிலை இருந்தது.
13-வது முறையாக அரை இறுதியில் விளையாடும் ஜெர்மனி அணி இந்தியாவை தோற்கடித்து 10-வது தடவையாக இறுதி போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.
முன்னதாக நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
5 முதல் 8-வது இடங்களுக்கான போட்டிகளில் பெல்ஜியம்- பிரான்ஸ் (மதியம் 2.30 மணி), நெதர்லாந்து-நியூசிலாந்து (மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
- தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
- இதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மதுபான பாரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் 2 சிறுவர்கள், ஒரு சிறுமி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
- 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது.
இந்நியைலில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







