டென்னிஸ்

சானியா மிர்சா, ரோகன் போபண்ணா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - அரையிறுதிக்கு முன்னேறியது சானியா, போபண்ணா ஜோடி

Update: 2023-01-25 01:07 GMT
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
  • காலிறுதியில் ஆடவிருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியது.

மெல்போர்ன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் முன்னணி வீராங்கனை சானியா மிர்சாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

2-வது சுற்று ஆட்டத்தில் அரியெல் பெஹர்(உருகுவே)-மகோட்டோ நினொமியா(ஜப்பான்) ஜோடியுடன் மோதிய சானியா-ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், காலிறுதியில் விளையாட இருந்த ஜெலேனா ஒஸ்டாபென்கோ-டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடி வாக் ஓவர் கொடுத்து வெளியேறியதால் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Tags:    

Similar News