டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சின்னர்

Published On 2025-11-15 21:59 IST   |   Update On 2025-11-15 21:59:00 IST
  • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
  • அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

லீக் சுற்றுகளின் முடிவில் இத்தாலியின் சின்னர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற இறுதிப்போட்டியில் சின்னர், 2வது அரையிறுதியில் வெற்றி பெற்றவருடன் மோதுகிறார்.

Tags:    

Similar News