டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கனடா வீரரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்

Published On 2025-11-16 02:52 IST   |   Update On 2025-11-16 02:52:00 IST
  • ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது.
  • அரையிறுதி சுற்றில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் தோல்வி அடைந்தார்.

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது. அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் ஆகியோர் மோதினர்.

இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் சின்னருடன் மோதுகிறார்.

Tags:    

Similar News