டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: மெத்வதேவ், சின்னர் காலிறுதிக்கு முன்னேற்றம்
- ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
- மெத்வதேவ் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவை தோற்கடித்தார்.
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், இங்கிலாந்தின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-4), 6-1 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஹோல்ஜர் ரூனேவும் மோத உள்ளனர்.