டென்னிஸ்
நீண்ட கால பயிற்சியாளரை பிரிந்தார் நம்பர் 1 டென்னிஸ் வீரர்
- அல்காரசின் பயிற்சியாளாராக இருந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் பெராரோ.
- இவரது பயிற்சியில் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார்.
மாட்ரிட்:
டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீரராக திகழ்ந்து வருபவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22). இவரது பயிற்சியாளாராக இர்ந்து வருபவர் ஜுவான் கார்லோஸ் பெராரோ.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டாக தனக்கு பயிற்சி அளித்து வந்த பயிற்சியாளர் ஜுவான் கார்லோஸ் பெரெரோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறேன் என அல்காரஸ் திடீரென அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அல்காரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைப் பருவக் கனவுகளை நிஜங்களாக மாற்றியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அல்காரஸ் தனது 16-வது வயதில் இருந்து ஜுவானிடம் பயிற்சிகள் பெற்று வந்தார். இதனால் 6 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் ஆகி சாதனை படைத்தார். 8 மாஸ்டர்ஸ் 1000 போட்டிகள் உள்பட 24 போட்டிகளில் அல்காரஸ் சாம்பியன் ஆனார். தனது 19-வது வயதில் உலகின் நம்பர் 1 வீரராக உருவெடுத்து சாதனை படைத்தார்.