தொழில்நுட்பச் செய்திகள்
லி-டிவி Y1 ப்ரோ

ஐபோன் 13 தோற்றம் கொண்ட புது ஸ்மார்ட்போன் - விலை இவ்வளவு தானா?

Published On 2022-06-01 04:26 GMT   |   Update On 2022-06-01 04:26 GMT
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ள லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போனில் ஐபோன் 13-ஐ போலவே கைரேகை சென்சார் இல்லை. ஆனால் ஃபேஸ் அன்லாக் பயோமெட்ரிக் அம்சத்துடன் வருகிறது.

லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஐபோன் 13 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள, இந்த ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஒரு எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆகும், இது யுனிசாக் T310 பிராசஸருடன் வருகிறது, இதில் 4GB ரேம் மற்றும் 256GB இன்டர்ணல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் முன்பக்கம் சிங்கிள் கேமரா உள்ளது. ஐபோன் 13-ஐ போலவே, இதிலும் கைரேகை சென்சார் இல்லை, ஆனால் ஃபேஸ் அன்லாக் பயோமெட்ரிக் அம்சத்துடன் வருகிறது. லி-டிவி Y1 Pro மாடல் 4GB ரேம்+ 32GB மெமரி வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 800 என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



4GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 510 என்றும் 4GB ரேம் + 256GB வேரியண்ட் இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 500-க்கு கிடைக்கிறது. இது மிட்நைட் பிளாக், ஸ்டார் ப்ளூ மற்றும் ஸ்டார் ஒயிட் ஆகிய நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. லி-டிவி போன் அடுத்த மாதம் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க, இரட்டை பிரைமரி கேமரா அமைப்புடன் வருகிறது, இது AI கேமராவுடன் 8MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5MP கேமரா உள்ளது. லி-டிவி Y1 Pro ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது. மேலும் டூயல் சிம் (நானோ) மற்றும் 6.5 இன்ச் எல்சிடி ஹெச்.டி பிளஸ் (720x1,560 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
Tags:    

Similar News