தொழில்நுட்பச் செய்திகள்
ரெட்மி K50

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸருடன் வெளியாகும் ரெட்மி K50 அல்ட்ரா?

Published On 2022-05-31 04:24 GMT   |   Update On 2022-05-31 04:24 GMT
ரெட்மி பிராண்டின் புது பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும். இத்துடன் 2K 120Hz OLED ஸ்கிரீன், டால்பி விஷன் சப்போர்ட், 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.


சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி K50 கேமிங் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதன் பின் மார்ச் மாதத்தில் ரெட்மி K50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரெட்மி K50 அல்ட்ரா பெயரில் புது ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ரெட்மி K50 சீரிசின் டாப் எண்ட் மாடல் என தெரிகிறது.

தற்போதைய தகவல்களின் படி ரெட்மி K50 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனிலும் இதே பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ரெட்மி K50 மாடலில் வழங்கப்பட்ட 2K 120Hz OLED ஸ்கிரீன், டால்பி விஷன் சப்போர்ட், 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

புதிய ரெட்மி K50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் இதே காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 
Tags:    

Similar News