தொழில்நுட்பச் செய்திகள்
போக்கோ F4 GT

போக்கோ F4 GT இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2022-05-28 06:18 GMT   |   Update On 2022-05-28 06:18 GMT
போக்கோ நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் F4 GT மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

போக்கோ நிறுவனம் விரைவில் பல்வேறு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. நேற்று போக்கோ F4 GT ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லண்டனில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஃபிளாக்‌ஷிப் மாடல் என்ற வகையில் போக்கோ F4 GT மாடலில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ F4 GT மாடலில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க போக்கோ F4 GT மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP மேக்ரோ சென்சார், 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.



போக்கோ F4 GT மாடலில் 4700mAh பேட்டரி, 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த MIUI 13 கஸ்டம் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் 3.0 மற்றும் டூயல் வேப்பர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் போக்கோ F4 GT மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இதுபற்றி போக்கோ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஃபிளாக்‌ஷிப் மாடல் என்பதால், இந்திய சந்தையில் இதன் விலை சற்றே அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது. 

Tags:    

Similar News