தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோக்ரூப்டாக் ஆப் அறிமுகம்

Published On 2019-02-22 06:26 GMT   |   Update On 2019-02-22 06:26 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோக்ரூப்டாக் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #RelianceJio #JioGroupTalk



ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை மிகவும் குறைந்த விலையில் வழங்கி, டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. டெலிகாம் சேவையை தவிர பல்வேறு இலவச செயலிகளையும் ஜியோ வழங்கி வருகிறது.

ஜியோ தனது பயனர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டி.வி. உள்ளிட்டவற்றை வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஜியோக்ரூப்டாக் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு ஜியோ பயனர்கள் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பயனர்கள் தங்களது ஜியோ நம்பர் கொண்டு பயன்படுத்த முடியும். சில நாட்களுக்கு மட்டும் ஜியோக்ரூப்டாக் செயலி சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஜியோ சேவையை பயன்படுத்தாதவர்களுடனும் பேச முடியும்.



கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எப்போது தனியாக மியூட் செய்ய வேண்டும் என்றும் க்ரூப் மியூட் அல்லது மீண்டும் அவர்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட் பயன்படுத்தி, பயனர்கள் இதர க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த செயலியை கொண்டு ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு வீடியோ கால் அல்லது க்ரூப் சாட் செய்ய முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனம் சுமார் 5.56 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News