தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 பிளஸ் லைவ் புகைப்படங்கள்

Published On 2019-01-31 05:43 GMT   |   Update On 2019-01-31 05:43 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. #MotoG7Plus #smartphone



மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இவற்றின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன .

முன்னதாக ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் வெளியானதைத் தொடர்ந்து இம்முறை மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய மோட்டோ ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல்களின் படி மற்ற மோட்டோ ஸ்மார்ட்போன்களில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) வசதி வழங்கப்படுகிறது.


புகைப்படம் நன்றி: Tudocelular.com

மோட்டோ ஜி7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.24 இன்ச் 2270x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, OIS
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் டர்போ சார்ஜிங்
Tags:    

Similar News