தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் லாவா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-01-30 11:27 IST   |   Update On 2019-01-30 11:57:00 IST
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா நிறுவனம் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இசட்92 என அழைக்கப்படுகிறது. #LAVAZ92 #Smartphone



லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லாவா இசட்92 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் லாவா இசட்92 ஸ்மார்ட்போன் 8.04 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் இலகுவாக பயன்படுத்த முடியும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனில் எளிதில் கீறல்கள் ஏற்படாது.

புதிய லாவா இசட்92 ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



லாவா இசட்92 சிறப்பம்சங்கள்:
 
- 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி

லாவா இசட்92 ஸ்மார்ட்போன் ஓசன் புளு-பிளாக் கிரேடியன்ட் ஃபினிஷ் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் லாவா இசட்92 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #LAVAZ92 #Smartphone
Tags:    

Similar News