தொழில்நுட்பம்
புகைப்படம் நன்றி: Mr Gizmo

கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்

Published On 2019-01-18 07:55 GMT   |   Update On 2019-01-18 07:55 GMT
மோட்டோரோலாவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #Motorola #smartphone



மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் துவங்கும் 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா இம்முறை மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.

இந்நிலையில், மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.


புகைப்படம் நன்றி: mysmartprice

முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களிலும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 AIE ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியண்ட்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.  

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் எட்ஜ்-டு-எட்ஜ் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் இவற்றின் விலை ரூ.20,000-க்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News