தொழில்நுட்பம்
கோப்புப் படம்

புதுவித ஐகான் எக்ஸ் இயர்பட்ஸ் உருவாக்கும் சாம்சங்

Published On 2019-01-05 06:29 GMT   |   Update On 2019-01-05 06:29 GMT
சாம்சங் நிறுவனம் புதிய ரக கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #Earphone



சாம்சங் நிறுவனம் புதுவித கியர் ஐகான் எக்ஸ் இயர்பட்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கியர் ஸ்போர்ட் மற்றும் கியர் ஃபிட் 2 போன்ற சாதனங்களின் மேம்பட்ட மாடலாக புதிய இயர்பட்கள் இருக்கும்.

புதிய ஐகான் எக்ஸ் இயர்பட்கள் SM-R170 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இவை கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இயர்பட்களில் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அதிகளவு மெமரி கொண்ட சாம்சங்கின் முதல் கியர் பிராண்டு இயர்போனாக புதிய இயர்பட்கள் இருக்கும்.



கேலக்ஸி வாட்ச் போன்று புதிய ஐகான் எக்ஸ் இயர்பட்களிலும் கேலக்ஸி பிராண்டிங் கொண்டிருக்கலாம். அவ்வாறு சாம்சங் சாதனங்களில் கேலக்ஸி பிராண்டிங் பரவலாக இருக்கும். புதிய இயர்பட்கள் தவிர சாம்சங் நிறுவனம் பிக்ஸ்பி வசதி கொண்ட புதிய கேலக்ஸி ஹோம் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய ஐகான் எக்ஸ் இயர்பட்களில் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கியர் ஐகான் எக்ஸ் 2018 முந்தைய மாடலை விட அதிகளவு பேக்கப் வழங்குகிறது. இதுதவிர புதிய சாதனத்தின் சார்ஜிங் கேஸ் திறன் மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.  

புதிய இயர்பட்களின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் அறிமுகம் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News