தொழில்நுட்பம்

பூமராங் வீடியோ, செல்ஃபி மோட் என புதிய வசதிகளுடன் அசத்தும் ஃபேஸ்புக் மெசஞ்சர்

Published On 2018-12-19 07:12 GMT   |   Update On 2018-12-19 07:12 GMT
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பூமராங் வீடியோ, புதிய செல்ஃபி மோட் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. #Facebook #messenger



ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வருகிறது. 

அந்த வகையில் பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



மெசஞ்சர் செயலியில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மெசஞ்சர் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. எனினும், இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
Tags:    

Similar News