தொழில்நுட்பம்

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிடும் எல்.ஜி.

Published On 2018-10-31 17:59 IST   |   Update On 2018-10-31 17:59:00 IST
உலகின் பிரபல மொபைல் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், எல்.ஜி. நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மொபைல் அறிமுகம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சாம்சங், ஹூவாய் போன்ற நிறுவனங்கள் விரைவில் தங்களது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய மொபைல் போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மொபைல் போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சி.இ.எஸ். கீநோட் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.



பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் புதிய தகவலை வழங்கியிருக்கிறார். எல்.ஜி. மடிக்கக்கூடிய மொபைல் போன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், எல்.ஜி. நிறுவனம் புதிய மொபைல் போனினை சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தை பொருத்த வரை பல்வேறு விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சாம்சங் மடிக்கக்கூடிய மொபைல் போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



சமீபத்தில் சாம்சங் வெளியிட்ட தகவல்களில் மடிக்கக்கூடிய மொபைல் போனில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

சாம்சங் நிறுவனம் போன்றே ஹூவாய் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனினும் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நிறுவனம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
Tags:    

Similar News