தொழில்நுட்பம்

சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம்

Published On 2018-10-23 09:07 GMT   |   Update On 2018-10-23 09:07 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய லேப்டாப் ஃபிளாஷ் என அழைக்கப்படுகிறது. #Samsung #laptop



சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் 802.11 ac 2X2 ஜிகாபிட் வயர்லெஸ் LAN கார்டு கொண்டுள்ளது. இதனால் புதிய லேப்டாப்பில் நொடிக்கு 1.7 ஜிகாபைட் வேகம் வரை சீராக இயங்கும்.

இத்துடன் புதிய ஃபிளாஷ் லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் KT கார்ப் மொபைல் நெட்வொர்க்கிற்காக சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் சாம்சங் தனது ஃபிளாஷ் லேப்டாப்பில் அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பை வழங்கியிருக்கிறது. புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 



கைரேகை சென்சார், சாம்சங் ரகசிய ஃபோல்டர் கொண்டிருக்கும் சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப்பில் பயனர்கள் தங்களது தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 

சர்வதேச ஃபிளாஷ் ஸ்டோரேஜ் கார்டுகளை சப்போர்ட் செய்யும் ஃபிளாஷ் லேப்டாப் வழக்கமான மைக்ரோ எஸ்.டி. கார்டுகளை விட ஐந்து மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் புகிய ஃபிளாஷ் லேப்டாப் மாடல்கள் வைட், சார்கோல் மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8,20,000 வொன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,360 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Samsung #laptop
Tags:    

Similar News