தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்

Published On 2018-10-05 08:25 GMT   |   Update On 2018-10-05 08:26 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoG7



மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரியவந்துள்ளது.

முன்னதாக மோட்டோ ஜி7 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படும் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



போர்த்துகீசு வலைதளத்தில் வெளியான விவரங்களில் மோட்டோ ஜி7 மாடலில் டூயல் பிரைமரி கேமரா, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் செல்ஃபிக்களை எடுக்க 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

மெமரியை பொருத்த வரை மோட்டோ ஜி7 மாடலில் 64 ஜி.பி.யும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை மோட்டோரோலா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. 
Tags:    

Similar News