தொழில்நுட்பம்

பயனர்களுக்கு இலவச அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்கும் ஏர்டெல்

Published On 2018-08-14 09:21 GMT   |   Update On 2018-08-14 09:21 GMT
ஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Airtel #Amazon


இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது 23-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அமேசான் பே உடன் இணைந்து பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. 

புதிய சலுகையின் படி ரூ.100-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கும், இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகையை தேர்வு செய்யும் பயனருக்கும் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

இலவசமாக வழங்கப்படும் அமேசான் கிஃப்ட் கார்டு கணக்கில் ஏற்கனவே ரூ.51 சேர்க்கப்பட்டிருக்கும். பயனர்கள் இந்த கார்டு மூலம் அமேசான் பே கணக்கில் பணத்தை சேர்த்துக் கொண்டு அமேசான் இந்தியா வலைத்தளத்தில் பொருட்களை வாங்கவோ, ரீசார்ஜ் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

கிஃப்ட் கார்டை பெற ஏர்டெல் பயனர்கள் தங்களது மைஏர்டெல் செயலிக்கு சென்று ஏர்டெல் தேங்ஸ் (Airtel Thanks) பேனரை க்ளிகி செய்ய வேண்டும். இனி பேனரை க்ளிக் செய்து கிஃப்ட் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த சலுகையை பெற பயனர் செய்யும் ரீசார்ஜ் ஏர்டெல் செயலி, அமேசான் மற்றும் பேடிஎம் மூலமாகவும் மேற்கொள்ளலாம். 

அமேசான் பே கிஃப்ட் கார்டை இலவசமாக பெற பயனர்கள் தங்களது ஏர்டெல் எண்களுக்கு ரீசார்ஜ் அல்லது போஸ்ட்பெயிட் சலுகைக்கு அடுத்த 30 நாட்களுக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
Tags:    

Similar News