தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஐரிஸ் ஸ்கேனருடன் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்4

Published On 2018-07-21 07:38 GMT   |   Update On 2018-07-21 07:38 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyTab



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்4 டேப்லெட் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய டேப்லெட்டில் சாம்சங் கைரேகை ஸ்கேனர் வழங்காதது தெரியவந்துள்ளது. அந்த வகையில் சாம்சங் தனது புதிய சாதனத்தில் ஐரிஸ் ஸ்கேனரை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவில் டேப் எஸ்4 மாடலில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. கேலக்ஸி எஸ்9 அல்லது எஸ்9 பிளஸ் மாடலில் இன்டெலிஜன்ட் ஸ்கேன் செட்டப் செய்யும் அனிமேஷன் வீடியோவே மீண்டும் கேலக்ஸி டேப் எஸ்4 ஃபர்ம்வேர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.  

இன்டெலிஜன்ட் ஸ்கேன் அம்சம் ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதனத்தை அன்லாக் செய்கிறது. இரு தொழில்நுட்பங்ளில் ஏதேனும் இயங்காத பட்சத்தில் மற்றொன்று வேலை செய்யும். 



வைபை சான்றின் தகவல்களில் கேலக்ஸி டேப் எஸ்4 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என குறிப்படப்பட்டு இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி டேப் எஸ் 4 ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவிலேயே அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

கேலக்ஸி அன்பேக்டு விழாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி வாட்ச் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. #Samsung #GalaxyTab
Tags:    

Similar News