அறிந்து கொள்ளுங்கள்

இதுவரை இல்லாத விலை குறைப்பு.. வியரபில்ஸ் வாங்க இதுதான் சூப்பர் சான்ஸ்..

Published On 2024-05-27 09:16 GMT   |   Update On 2024-05-27 09:16 GMT
  • 17 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
  • 22.62 டாலர்களில் இருந்து 18.59 டாலர்கள் ஆக சரிந்துள்ளது.

ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், இயர்பட்ஸ் என மின்னணு சாதனங்கள் சந்தை உலகளவில் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை மூலம் அறிவிக்கும் அமைப்பு தான் சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.).

ஒவ்வொரு சாதனமும் எந்த அளவுக்கு விற்பனையாகின்றன, அவற்றின் விலை எப்படி இருக்கிறது, பயனர்கள் அதை வாங்கும் விதம் என மின்னணு சாதனங்கள் விற்பனை குறித்த ஒவ்வொரு விவரமும், ஐ.டி.சி. வெளியிடும் அறிக்கையில் துல்லியமாக இடம்பெற்று இருக்கும்.

அந்த வரிசையில், ஐ.டி.சி. சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் விற்பனை மற்றும் அவற்றின் விலை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், உலகளவில் அணிக்கூடிய சாதனங்கள் (Wearables) விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

 


ஒட்டுமொத்தத்தில் அணியக்கூடிய சாதனங்களின் சராசரி விற்பனை விலை 2024 ஆண்டின் முதல் காலாண்டில் 22.62 டாலர்களில் இருந்து 18.59 டாலர்கள் ஆக சரிந்துள்ளது. இந்த விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு ஆகும். ஆன்லைனில் அதிகப்படியான ஸ்டாக் இருப்பு மற்றும் குறைந்தளவு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டதே விலை குறைப்புக்கு முக்கிய காரணம் ஆகும்.

ஸ்மார்ட்வாட்ச்களின் சராசரி விற்பனை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.24 டாலர்களில் இருந்து 20.65 டாலர்களாக சரிந்துள்ளது. இதேபோன்று மேம்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களின் பங்கு 2.0 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய அணியக்கூடிய சாதனங்கள் சந்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

ஐ.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் போட், நாய்ஸ், பயர்-போல்ட், பௌல்ட் மற்றும் ஒப்போ உள்ளிட்டவை முன்னணி இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டும் இதே நிறுவனங்கள் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News