வேற லெவல் அம்சங்களுடன் முற்றிலும் புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்!
- புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது.
- ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X300 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அலுமினிய அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் GT2 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2.5D வளைந்த 2.07-இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் சதுரங்க டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ப்ளூடூத், இசிம் (eSIM) ஆப்ஷன்களில் வருகிறது.
விவோ வாட்ச் GT2 மாடல் ப்ளூ ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் படிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இந்த வாட்ச் பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இத்துடன் பொருந்தக்கூடிய வாட்ச் டயல்கள் உள்ளன.
மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது. இசிம் பயன்படுத்தும் பட்சத்தில், இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விலை விவரங்கள்:
புதிய விவோ வாட்ச் GT2 புளூ, ஸ்பேஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் வண்ணங்களில் வருகிறது. இதன் ப்ளூடூத் வேரியண்ட் விலை CNY 499 (இந்திய மதிப்பில் ரூ. 6,220) ஆகவும், இசிம் வேரியண்ட் விலை CNY 699 (இந்திய மதிப்பில் ரூ. 8,710) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.