அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 6ஜி வெளியீடு - மிக முக்கிய தகவலை தெரிவித்த மத்திய மந்திரி

Published On 2022-10-03 11:09 GMT   |   Update On 2022-10-03 11:09 GMT
  • இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் 5ஜி சேவைகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டன.
  • எனினும், 5ஜி வர்த்தக வெளியீட்டுக்கு மேலும் சில மாதங்கள் வரை ஆகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவைகள் சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி சேவை அறிமுகமானதை அடுத்து, 6ஜி பற்றிய பேச்சுவார்த்தைகள் பரவலாக துவங்கி உள்ளன. மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் உலகளவில் 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கும் என தெரிவித்து இருக்கிறார். முன்னதாக 5ஜி வெளியீடு பற்றிய கேள்விக்கும் இதே போன்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

6ஜி மற்றும் 5ஜி சேவைகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் மிக முக்கிய குழுக்களை நிர்வகிக்கும் சர்வதேச தகவல் தொடர்பு யூனியனில் இந்திய அதிகாரிகள் நிறைந்துள்ளனர் என்றும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார். 3ஜி-யில் இருந்து 4ஜி போன்றே அடுத்த தலைமுறை 6ஜி தொழில்நுட்பமும் 5ஜி சேவையை விட மேம்பட்டு இருக்கும். 4ஜி-யில் இருந்து 5ஜி-க்கான மாற்றத்திற்கு ஏராளமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் மாற்றங்கள் அவசியமாக உள்ளன.

இதன் காரணமாக 6ஜி தரம் மற்றும் அதை சுற்றிய ஆய்வுகளை எளிதில் முடித்துவிட முடியும். தற்போது சர்வதேச அளவில் 5ஜி சேவையை வழங்குவதில் இந்தியா பின்தங்கி இருந்த போதிலும், இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் அதிவேகமானதாக இருக்கும். புதிய 5ஜி-யை விட 6ஜி தொழில்நுட்பம் பலமடங்கு அதிவேகமான ஒன்றாக இருக்கும்.

Tags:    

Similar News