அறிந்து கொள்ளுங்கள்

168 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்.. ஜியோ சூப்பர் சலுகை அறிவிப்பு

Published On 2023-12-07 10:48 GMT   |   Update On 2023-12-07 10:48 GMT
  • ஜியோ சலுகையில் தினமும் 2 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.
  • இந்த சலுகையில் ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்காக முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ரிசார்ஜ் சலுகையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் வாய்ஸ் காலிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. ரூ. 909 விலையில் கிடைக்கும் புதிய ஜியோ சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. வரையிலான அதிவேக டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன.

அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். தவிர இந்த சலுகையில் சோனி லிவ் மற்றும் ஜீ5 என பல்வேறு ஒ.டி.டி. தளங்களுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. ஜியோ வலைதள விவரங்களின் படி ரூ. 909 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., மொத்தத்தில் 168 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது.

 


இந்த சலுகையின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி அதிவேக டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் பயனர்கள் நொடிக்கு 40Kb வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த சலுகையில் சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்துடன் ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோ கிளவுட் சேவைக்களுக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோருக்கு இலவச 5ஜி டேட்டா வசதியும் வழங்கப்படுகிறது.

முன்னதாக ஐ.சி.சி. உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 808 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. இதில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News