அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 5ஜி வெளியீடு - தயார் நிலையில் ரிலையன்ஸ் ஜியோ

Published On 2022-08-02 05:05 GMT   |   Update On 2022-08-02 05:05 GMT
  • இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெற்று முடிந்து விட்டது.
  • இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியது. ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ. 88 ஆயிரத்து 078 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் மிகப் பெரிய 5ஜி நெட்வொர்க் கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உருவெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி உள்ளது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 085 கோடி செலவிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் 2 ஆயிரத்து 668 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 18 ஆயிரத்து 784 கோடிக்கு வாங்கி இருக்கிறது.


டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் இன்றி அதானி குழுமம் சார்பில் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டில் 400 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 212 கோடி ஆகும். இந்தியாவின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி மதிப்பிலான தொகை ஈட்டப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 71 சதவீத 5ஜி ஏர்வேவ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏலத்தில் மொத்தம் 72 ஆயிரத்து 098 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 51 ஆயிரத்து 236 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஏலத்தின் முடிவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 22 வட்டாரங்களிலும் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உரிமத்தை பெற்று இருக்கிறது. இதன் மூலம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News