மிரட்டும் அம்சங்களுடன் ஒப்போ ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா..?
- 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.
- புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ வாட்ச் S என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டைலிஷ் வட்ட-வடிவ டயல், மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இது வெறும் 8.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இதன் எடை சுமார் 35 கிராம் ஆகும்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய 16-சேனல் ஆப்டிகல் பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் 8-சேனல் ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய ஒப்போ வாட்ச் S மாடலில் ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கேஸ், சிறந்த இருப்பிட துல்லியத்திற்கான இரட்டை அதிர்வெண் GPS மற்றும் கொழுப்பை எரிக்கும் பகுப்பாய்வை வழங்கும் AI ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளரையும் கொண்டுள்ளது.
கூடுதலாக, இது ECG, இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன், மணிக்கட்டு வெப்பநிலை, தூக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.
புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ வாட்ச் S சில்வர் மற்றும் பிளாக் வேரியண்ட்கள் CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ. 16,030) என்றும் டூயல்-டோன் கிரீன் வேரியண்ட் CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ. 18,498) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.