மொபைல்ஸ்

ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் லீக்கானது

Published On 2022-06-10 05:15 GMT   |   Update On 2022-06-10 07:23 GMT
  • ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.30 ஆயிரத்திற்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம்.
  • இந்த ஸ்மார்ட்போன் கிரே ஷேடோ மற்றும் ஜேடு ஃபாக் கலர் ஆகிய இரு நிறங்களில் வருகிறது.

ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் கசிந்துள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் 'T' மாடலாக கடந்த மாதம் பல்வேறு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது மீடியா டெக் டைமென்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சாரும் இதில் உள்ளது. 


ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.30 ஆயிரத்திற்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற நாடுகளில் கடந்த மே மாதம் வெளியான இந்த ஸ்மார்போனின் 8ஜிபி ரேம் 128ஜிபி இண்டர்னல் மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,400 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் 12ஜிபி ரேம் 256ஜிபி இண்டர்னல் மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,600 ஆக இருந்தது.

இந்த ஸ்மார்ட்போன் கிரே ஷேடோ மற்றும் ஜேடு ஃபாக் கலர் ஆகிய இரு நிறங்களில் வருகிறது. உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடல் அதே அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகுமா அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

Similar News