அறிந்து கொள்ளுங்கள்

வெளியீட்டுக்கு முன்பே விற்பனைக்கு வரும் நத்திங் போன்

Published On 2022-06-17 10:44 IST   |   Update On 2022-06-17 10:44:00 IST
  • நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 12-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • மெக்சிகோ மற்றும் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது.

நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற உள்ள ஈவண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அந்த போன் அறிமுகமாகும் முன்பே விற்பனைக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 100 போன்களை மட்டும் அந்நிறுவனம் வெளியீட்டு முன் விற்பனை செய்ய உள்ளது.

இதற்காக ஸ்டாக் எக்ஸ் நிறுவனத்துடன் நத்திங் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏலத்தின் அடிப்படையில் இந்த 100 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி வருகிற ஜூன் 21-ந் தேதி ஸ்டாக் எக்ஸின் தொழில்நுட்ப தளமான டிராப் எக்ஸின் இந்த ஏலம் தொடங்க உள்ளது. ஜூன் 23-ந் தேதி வரை இந்த ஏலம் நடைபெறும் என கூறப்படுகிறது.


விருப்பமுள்ளவர்கள் ஸ்டாக் எக்ஸ் தளத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்து இந்த ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் ஜெயித்தவர்களுக்கு இந்த போன் 35 வேலை நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெக்சிகோ மற்றும் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் இந்த ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News